இவ்வளவு கெடுபிடி எதற்கு? பழங்காநத்தத்தில் இந்து முன்னணி போராட்டம்!

Published On:

| By Kavi

Hindu front organisation protest for thiruparakundram

திருப்பரங்குன்றம் மலையை மீட்போம் என்று பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Hindu front organisation protest for thiruparakundram

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் ஆடு, கோழி என உயிர்பலி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையை காக்க இன்று (பிப்ரவரி 4)அறப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் மதுரைக்கு நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா.

கைதும், அனுமதியும் Hindu front organisation protest for thiruparakundram

Hindu front organisation protest for thiruparakundram

இந்த நிலையில் இன்று காலை முதல் திருப்பரங்குன்றம் மலை முன்பு போலீசார் அனுமதியையும் மீறி இந்து முன்னணி அமைப்பினர் கூடினர். சிலர் பக்தர்களைப் போலவும் மலை மீது ஏறினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பாஜக பொதுச்செயலாளர் இராம சீனிவாசன் மதுரையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் வர முயன்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஒரு மணி நேரம் மட்டும் போராட்டம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து கையில் வேலுடன் பழங்காநத்தம் வந்த இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வளவு பயமா? Hindu front organisation protest for thiruparakundram

“கந்தனுக்கு அரோகரா… வீரனுக்கு அரோகரா… வெற்றிவேல்… முருகவேல்” என்ற கோஷங்களுடன் 700 க்கும் அதிகமான இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கையில் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசுகையில், “ஸ்டாலின் அரசாங்கம் இவ்வளவு பயம் கொண்ட அரசாங்கம் என்று தெரியாமல் போய்விட்டது. ஐயா ஸ்டாலினுக்கு சொல்கிறேன், இதெல்லாம் வெறும் டீசர் தான். டீசருக்கே இப்படி பயந்தால் எப்படி? மெயின் பிக்சர் இனிமேல் தான் வரப்போகிறது.

திருப்பரங்குன்றம் என்பது ஒரு சின்ன ஊர். ஐந்து மாநகராட்சி வார்டுகள் தான் உள்ளன. இங்கு இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்தால் எதற்கு இவ்வளவு கெடுபிடி விதிக்கிறீர்கள். 144 தடை உத்தரவு போடுகிறீர்கள். 15 மாவட்ட எஸ்பிக்கள் எங்களுடன் கமிஷனர் ஆபீஸில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவ்வளவு கெடுபிடி ஏன்?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு வெட்டுவேன், கோழி வெட்டுவேன் என்று சொல்லும் போது வேடிக்கை பார்த்த காவல்துறை, ராமநாதபுரத்தில் இந்துக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நவாஸ் கனி அங்கு வந்து பிரியாணி சாப்பிட்ட போது வேடிக்கை பார்த்த காவல்துறை… மலையின் புனிதத்தை காப்பாற்ற போராடுகிற இந்துக்கள் மீது ஏன் வழக்கு போடுகிறது. 2026ல் முருகன் ஆட்சிதான் நடைபெறும்” என்றனர். Hindu front organisation protest for thiruparakundram

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share