இந்தி திணிப்பு : நக்கலுடன் எச்சரித்த கமல்
இந்தியைத் திணிக்கும் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைப், பயிற்றுவிக்கும் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தது.
இதற்கு தென் மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேரளாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் இந்தி திணிப்புக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும். 75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும்.
இந்தியை வளர்க்க, அதைப் பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! மன்னிக்கவும் உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ” என்று நக்கல் செய்து பதிவிட்டுள்ளார்.
பிரியா
நடிகை தற்கொலை: லவ் ஜிகாத் காரணமா?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி வாய்ப்பில் தடம்பதித்த இந்தியா