இந்தியை திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

அரசியல்

இந்தியை தமிழ் மொழி மீது திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பின் பேரில் பனாரஸ் பல்கலைக் கழகத்திலிருந்து 18 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொண்ட குழு தமிழகத்துக்கு வருகை தந்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை “தமிழ்நாடு தர்ஷன்” என்ற பெயரிலான சுற்றுப்பயணத்துக்கு பனாரஸ் பல்கலைக் கழக மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பனாரஸ் பல்கலை மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தி மொழியை விட தமிழ் மிகவும் பழமையான மொழி.

தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி” என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள் சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆளுநருக்கு எதிராகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில் சட்டப்பேரவையிலிருந்து அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியதை போல, ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக அல்லாத மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.

நேற்று மாலை சைதாப்பேட்டையில், ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தின. இந்தச்சூழலில், தமிழ் மீது இந்தியைத் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

பிரியா

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

ஜூனியர் என்.டி.ஆருடன் வெற்றிமாறன் பேச்சுவார்த்தை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *