இமாச்சல் ரிசல்ட்: பாஜகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் பிரியங்கா

இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு கடுமையான சவாலை கொடுத்து வருகிறது.

இன்று டிசம்பர் எட்டாம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்…. அங்குள்ள மொத்தம் 68 இடங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று காலை பத்து மணி நிலவரப்படி பாஜக 31 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியும் 31 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற கட்சிகள் மூன்று இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

காலை 10 மணி வாக்கில் வாக்கு சதவீதப் படி பாஜக 45 புள்ளி 9 2 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் 41.07 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

அந்த மாநிலத்தில் தற்போது வரை ஆளுங்கட்சியான  பாஜகவின் அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். பாஜக அமைச்சர் கோவிந்தா தாகூர் மணாலி தொகுதியில் சுமார் 2200 ஓட்டு பின்தங்கியுள்ளார்.

இன்று காலை 10 மணி நிலவரப்படி பாஜகவின் முதல்வராக இருக்கும் ஜெயராம் தாக்கூர் 764 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

அதே நேரம் பாஜக அமைச்சர் ராகேஷ் பதானியா 2267 ஓட்டு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இதே போல பாஜக அமைச்சர் சர்வின் சவுத்ரி, பரத்வாஜ் உள்ளிட்டோரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.

இமாச்சல் பிரதேஷ் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி விஜய் ஆசீர்வாத் என்ற பெயரில் பல்வேறு தேர்தல் பேரணிகளை நடத்தினார். இமாச்சல் பிரதேசத்தில் பிரியங்கா தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இமாச்சல் பிரதேஷ் தேர்தலில் பாஜகவுக்கு கடுமையான சவாலை கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. தன் வீட்டில் இருந்தபடி இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளை பிரியங்கா காந்தி ஆர்வமுடன் கவனித்து வருகிறார்.

ஆரா 

குஜராத் தேர்தல்: 10 மணி நேர நிலவரம்!

நெருங்கும் மாண்டஸ் புயல்: துவங்கியது மழை

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts