இமாச்சல் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அரசியல்

இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

68 எம்எல்ஏக்கள் கொண்ட இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதையொட்டி, வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ், பாஜகவோடு ஆம் ஆத்மியும் களம் புகுந்துள்ளது.

இதனால் அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே, ஆம் ஆத்மி இந்த மாநிலத்துக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதன்மூலம், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

அந்தக் கட்சி இமாச்சலில் உள்ள பதேபூர், நக்ரோட்டா பக்வான், பாவோன்டா சாகிப் மற்றும் லஹால்-ஸ்பிடி ஆகிய 4 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களை கடந்த செப்டம்பர் மாதமே அறிவித்திருந்தது.

இதன் அடுத்தகட்ட பட்டியல் நாளைக்குள் (அக்டோபர் 20) அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

அதுபோல் காங்கிரஸும் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. ஆனால், பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பாஜக இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அக்கட்சி தனது முதல் பட்டியலில் மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் 62 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த தாக்குர், நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் ஏழாவது முறையாக போட்டியிடுகிறார்.

ஜெ.பிரகாஷ்

அனுமதி மறுப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் கைது!

ஓ.பி.எஸ்சை வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.