பாஜக ஆளும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று (அக்டோபர் 14) அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி நிறைவுபெற இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 55.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதையடுத்து, இந்த மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இன்று (அக்டோபர் 14) அறிவித்தார்.
அதன்படி இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்பு மனுத்தாக்கல்: அக்டோபர் 17
மனுத்தாக்கல் நிறைவு: அக்டோபர் 25
மனுத்தாக்கல் பரிசீலனை: அக்டோபர் 27
திரும்பப் பெற கடைசி நாள்: அக்டோபர் 29
வாக்குப்பதிவு: நவம்பர் 12
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 8
ஜெ.பிரகாஷ்
தரூருக்கு கிடைக்காத வரவேற்பு கார்கேவுக்கு: தமிழக காங்கிரஸ் தடபுடல்!
அரசு விழாவில் தமிழக அமைச்சரோடு பாஜக தலைவர்