இமாச்சல் தேர்தல்: நாளை கார்கே பிரசாரம்!

அரசியல்

இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, நாளை (நவம்பர் 8) அங்கு பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனினும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் ஆம் ஆத்மியைச் சேர்ந்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி, பூபேஷ் பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக, அவர் நாளை (நவம்பர் 8) இமாச்சல் செல்ல உள்ளார்.

அங்கு நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. அதில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது-தினகரன்

டிஜிட்டல் திண்ணை: சபாநாயகர் பொன்முடி… அமைச்சர் அப்பாவு… ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.