இமாச்சல் தேர்தல்: 65.5% சதவீத வாக்குகள் பதிவு!

அரசியல்

இமாச்சல் பிரதேசத்தில் இன்று (நவம்பர் 12) நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 65.5% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் இன்று 68 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தோ்தலில் முதல்வா் ஜெய்ராம் தாக்குா், முன்னாள் முதல்வா் வீா்பத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் சத்பால் சிங் சாட்டி உள்பட 412 வேட்பாளா்கள் களம் இறங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று நடந்த தேர்தலில் 65.5% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியான தஷிகாங்கில் 98 புள்ளி 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 74% வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 65.5% வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவாகிய வாக்குகள் அடுத்த மாதம் 8ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது.

டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

மகாராஷ்டிரா: ஏக்நாத் அணிக்கு தாவிய உத்தவ் ஆதரடவு எம்.பி.!

மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.