கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து அந்த மாநில அரசு கடந்த பிப்., 5ம் தேதி ஹிஜாப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பள்ளி சீருடை விதிகளை மீறுவது சரியல்ல, எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று(அக்டோபர் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
அதில் நீதிபதி ஹேமந்ந்த குப்தா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும், நீதிபதி சுதான்சு துலியா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.
இதனால் வழக்கு 3 ஆவது நீதிபதிக்கு மாற்றப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
கலை.ரா
ரூ.50 கோடி வரி ஏய்ப்பு?: எடப்பாடி ஆதரவாளர் வீட்டில் இரண்டாவது நாளாக ரெய்டு!
காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர்!