எடப்பாடி ஆட்சியில் ஊழல்: நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்!

அரசியல்

நெடுஞ்சாலைத் துறையில் நடந்த முறைகேடு தொடர்பாகக் கண்காணிப்பு பொறியாளர் பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த போது பல்வேறு முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மொத்தம் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடர்ந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்த வழக்கு வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்தச்சூழலில் அவரது ஆட்சியில் தஞ்சையில் நெடுஞ்சாலைத் துறையில் 692 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிய பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அறப்போர் இயக்கம் பல முறை புகார்கள் கொடுத்துத் தடுத்தும் அதை எல்லாம் மீறி தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறையில் செய்யப்பட்ட டெண்டர் செட்டிங் புகாரில் அன்று அங்குக் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிய பழனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டமாக அவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டு கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்த 692 கோடி செட்டிங் புகாரில் அன்றைய முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு என்ன என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.

பிரியா

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *