ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: கி.வீரமணி எச்சரிக்கை!

Published On:

| By Selvam

தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்எஸ்எஸ் ஊர்வலங்கள் மூலம் அச்சாரமிடத் திட்டமிடுகின்றனர் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு என்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், அதனை ஒரு சாக்காகக் கொண்டு ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் காலூன்றிட திட்டமிட்டு குறிவைத்துச் செயல்படுகிறது.

வீண் வம்புகளை வலிய இழுத்து, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது என்று பழிபோட திட்டமிட்டு செயலாற்றுகின்றன.

தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்எஸ்எஸ் ஊர்வலங்கள் மூலம் அச்சாரமிடத் திட்டமிடுகின்றனர். பெரியார் மண் இது, மறவாதீர். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலமாம்.

அந்நாளில் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்திட, அனுமதியளிக்க ஐகோர்ட்டு கட்டளையிட்டு இருப்பது நியாயம்தானா?.

அந்த நாளில் ஊராட்சி, பஞ்சாயத்துகளில் ஊர் சபைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நாளல்லவா? இதுபற்றி தமிழ்நாடு அரசும், ஏன் ஐகோர்ட்டும்கூட காந்தி பிறந்த நாள் என்பதை நினைவில் வைத்து, தங்கள் முடிவை மீண்டும் சீராய்வு செய்யவேண்டும்.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக் காடாக்கத் தெரிந்தோ, தெரியாமலோ யாரும் துணை போக வேண்டாம். மதவெறி மாய்த்த – மனிதநேயம் என்றும் தழைக்கும் மண்ணாக தமிழ்நாட்டை பாதுகாப்பது, தமிழ்நாட்டு மக்களின் முக்கிய கடமை – கட்சி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

குமரி: சுரேஷ் ராஜனை முடக்கிய ஸ்டாலின்- தனிக்காட்டு ராஜாவான மனோ தங்கராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.