சீமானுக்கு நிதானம் வேணும் : எச்சரிக்கும் உயர் நீதிமன்றம்!

Published On:

| By Kavi

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு நிதானம் தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. High Court has advised Seaman

ராஜீவ் குறித்து பேச்சு! High Court has advised Seaman

2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி பற்றி பேசி வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த ஜனவரி 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சீமான் கோரிக்கையை ஏற்க மறுப்பு!

High Court has advised Seaman

அப்போது சீமான் தரப்பில், ‘சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்” என கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்றும் கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நிதானம் வேண்டும் High Court has advised Seaman

அதன்படி இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 6) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே இவ்வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை” என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமான் தரப்பு கோரிக்கையையும் நிராகரித்துவிட்டார்.

சீமான் தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துக்களை சீமான் பேசக் கூடாது எனவும் அவருக்கு அறிவுரை வழங்க சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தொடர்ந்து 4 முறை நீதிமன்ற படி ஏறினால்தான் சீமானுக்கு நிதானம் வரும். அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். அடுத்தவரை எரிச்சலூட்டும் வகையில் பேசுவதுதான் சீமானுக்கு வழக்கமாக உள்ளது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார். High Court has advised Seaman

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share