சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல்

உத்தரவை மீறி செந்தில்பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக திமுக அரசுக்கு எதிராக பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

அதிலும் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தனது  ட்விட்டர் பக்கத்தில் சொத்துக்குவிப்பு, ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வரும் சவுக்கு சங்கருக்கு தடைவிதிக்க கோரியும்,

மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்கவும் உத்தரவிடக் கோரியும் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவிட்ட பின்னரும் தம்மை பற்றி அவதூறு கருத்துகளை கூறி வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சமயத்தில் தான் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதனால் தொடர்ந்து சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார்.

அவர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அவதூறு கருத்து பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் தனது கருத்துக்கு சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, இனி ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் கூறி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செந்தில்பாலாஜியிடம் முதல்வர் அக்கறை காட்டுவது ஏன்? : சீமான் பதில்!

‘ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா?’: மிரட்டும் மாமன்னன் டிரெய்லர்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *