மோடி 3.0 : பதவியேற்ற அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற்றது.
அப்போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மொத்தம் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில் 30 பேர் மத்திய அமைச்சர்களாகவும், 41 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இவர்களில் பாஜக சார்பில் 61 பேரும், கூட்டணி கட்சி சார்பில் 11 பேரும் அடங்குவர்.
மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டவர்கள் :
- ராஜ்நாத் சிங்
- அமித்ஷா
- நிதின் கட்கரி
- ஜே.பி.நட்டா
- சிவராஜ் சிங் சவுகான்
- நிர்மலா சீதாராமன்
- ஜெய்சங்கர்
- மனோகர் லால் கட்டார்
- பியூஷ் கோயல்
- தர்மேந்திர பிரதான்
- ஓரம் ஜூவல்
- கிரி ராஜ் சிங்
- அஸ்வினி வைஷ்ணவ்
- ஜோதிராதித்ய சிந்தியா
- பூபேந்தர் யாதவ்
- கஜேந்திர சிங் ஷெகாவத்
- அன்னபூர்ணா தேவி
- ஹர்தீப் சிங் புரி
- கிரண் ரிஜிஜூ
- கிஷன் ரெட்டி
- வீரேந்திர குமார்
- பிரகலாத் ஜோஷி
- சிராக் பாஸ்வான் (லோக் ஜன சக்தி கட்சி)
- குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி)
- ஜித்தன் ராம் மஞ்சி (ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சி)
- லலன் சிங் (ஐக்கிய ஜனதா தள கட்சி)
- ராம் மோகம் நாயுடு (தெலுங்கு தேசம் கட்சி)
மத்திய இணை அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டவர்கள் :
- எல்.முருகன்
- அஜய் தாம்தா
- சோபா கரந்லாஜே
- கீர்த்தி வர்தன் சிங்
- சாந்தனு தாகூர்
- நித்யானந்த் ராய்
- சுரேஷ் கோபி
- கிரிஷன் பால் குர்ஜால்
- பங்கஜ் சவுத்ரி
- ராம்தாஸ் அத்வாலே
- எஸ்.பி.சிங் பாகேல்
- ஜிதின் பிரசாத்
- ஸ்ரீபாத் நாயக்
- பண்டி சஞ்சய் குமார்
- கம்லேஷ் பஸ்வான்,
- பாகிரத் சவுத்ரி
- சதீஷ் சந்திர துபே
- ரவ்னீத் சிங்
- சஞ்சய் சேத்
- துர்கா தாஸ் உய்கே
- ரக்ஷா கட்சே
- சுகந்தா மஜும்தர்
- சாவித்ரி தாக்கூர்
- பிஎல் வர்மா
- பகீரத் சவுத்ரி
- கமலேஷ் பாஸ்வான்
- சதீஷ் சந்திர துபே
- துர்கா தாஸ் உய்கே
- ரக்ஷா காட்சே
- சுகந்தா மஜும்தார்
- டோகன் சாஹு
- ராஜ் பூஷன் சௌத்ரி
- பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா
- ஹர்ஷ் மல்ஹோத்ரா
- ராம் நாத் தாகூர் (ஐக்கிய ஜனதா தள கட்சி)
- அனுப்பிரியா படேல் (அப்னா தள கட்சி)
- சோமண்ணா (தெலுங்கு தேசம் கட்சி)
- சந்திரசேகர் (தெலுங்கு தேசம் கட்சி)
5 இணையமைச்சர்கள் (தனி பொறுப்பு)
- ராவ் இந்தர்ஜீத் சிங்
- ஜிதேந்திர சிங்
- அர்ஜுன்ராம் மேக்வால்
- பிரதாப் ராவ் யாதவ் ( சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சி)
- ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரிய லோக் தளம் கட்சி)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
T20 WorldCup : டாஸ் வென்றது பாகிஸ்தான்.. இந்திய அணி பேட்டிங்!
”நரேந்திர தாமோதரதாஸ் மோதி என்னும் நான்” : ஹாட்ரிக் அடித்த மோடி