தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையையேற்ற ஜார்க்கண்ட் ஆளுநர், முதலமைச்சர் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 16 இடங்கள் என மொத்தமாக 47 இடங்களை கைப்பற்றியது.
பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது.
காங்கிரஸ் + முக்தி மோர்ச்சா கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார் .
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் என்னும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீடு பெற்றார் என பாஜக குற்றச்சாட்டு எழுப்பியதோடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
மேலும் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு அளித்திருந்தது.
இந்த நிலையில் மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அவரின் முதலமைச்சர் பொறுப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ நிசிகாந்த் துபே ஜார்க்கண்டில் மீண்டும் தேர்தல் நடக்க வேண்டும் எனவும் அதற்கு பாஜக தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு!