மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

Published On:

| By Kavi

அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீனில் வந்துள்ள ஹேமந்த் சோரன் முதல்வராக மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.

போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை கையகப்படுத்தினார் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது.

5 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர், ஜூன் 28ஆம் தேதி வெளியே வந்தார்.

இந்நிலையில் ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று (ஜூலை 3) ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தகூட்டத்தில் மீண்டும் ஹேமந்த் சோரனை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதல்வராக இருந்த சம்பயி சோரன், தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹேமந்த் சோரனுக்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவோம், அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும் எங்கள் கூட்டணி வலுவாக இருப்பதால் இன்று தலைமையை மாற்ற முடிவெடுத்துள்ளோம். கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான் விருப்பத்துடன் ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிதான் செயல்படுகிறோம். இதுபற்றி பின்னர் பேசுகிறேன்” என்றார்.

விரைவில் முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கான தேதியை ஆளுநர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மோகனின் ஹரா… ஓடிடி ரிலீஸ் தேதி!

 மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி (நிர்மான்) இணையத்தளத்தை ஜூலை 2-ம் தேதி தொடங்கி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel