போரில் அமைதிக்கான ஒரே வழி உக்ரைனுக்கு உதவுவதுதான் என்று இத்தாலி பிரதமர் மெலோனி கூறியுள்ளார்.
கடந்த வாரம் பதவியேற்ற இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர், “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, ராணுவ ரீதியாக தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு உதவ வேண்டும். உக்ரைனுக்கு உதவுவதுதான் போரில் அமைதிக்கான ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார்.
மெலோனியின் கூட்டணி கட்சிகள் ரஷ்ய அதிபர் புதினுடனான நட்பு காரணமாக போர் விவகாரத்தில் தெளிவற்று இருந்தபோதிலும், பிரதமர் மெலோனி பலமுறை உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு!
கிச்சன் கீர்த்தனா – கதம்ப முறுக்கு