பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான என்.டி.பி.பி-யைச் சேர்ந்த ஹெகானி ஜகாலு, லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளர் அசெட்டோ ஜிமோமியை தோற்கடித்து, வெற்றி பெற்றிருக்கிறார்.
நாகாலாந்து மாநில அந்தஸ்து அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (மார்ச் 2 ) முதல் பெண் எம்.எல்.ஏ- வாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஹெகானி ஜகாலு.
நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஹெகானி ஜகாலு செய்தியாளர்களிடம் பேசிய போது நாகலாந்தில் உள்ள ஆணாதிக்க மனநிலை தற்போது மாறியுள்ளது என்றும் இனி பெண்களும் அதிக அளவு அரசியலுக்கு வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாகாலாந்து மாநிலத்தின் முதல் பெண் எம்.எல்.ஏ-வான ஹெகானி ஜகாலுவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், என்.டி.பி.பி -யைச் சேர்ந்த மற்றொரு பெண் வேட்பாளரான சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் மேற்கு அங்கமி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!