‘ஆணவத்தின் உச்சம்’ : ஆளுநருக்கு வைகோ கண்டனம்!

அரசியல்

ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்டெர்லைட் ஆலை பற்றிப் பேசியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று (ஏப்ரல் 6) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித் துணிக நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களின் போராட்டத்தைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் ஆளுநர்.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார்.

அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்திருக்கிறார்கள், நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன.

சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பிரியா

“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!

ராஜா இசையில்…மம்மி சொல்லும் வார்த்தை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *