அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

suo moto against ministers

தமிழக அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சூமோட்டோ வழக்குகள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தினசரி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. suo moto against ministers

சொத்துக்குவிப்பு வழக்குகளில் தற்போதைய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி,

மற்றும் அமைச்சர் பதவியிழந்த பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன.

இந்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.

கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போர்ட்ஃபோலியோவை கவனித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் நிர்வாக அடிப்படையில் அக்டோபர் 3 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜனவரி முதல் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தசூழலில் இன்று (ஜனவரி 8) 6 சூமோட்டோ வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் 9 வரை தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும்.

ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும்.

பொன்முடிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.

“அனைத்து வழக்குகளிலும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடங்கும். அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளால், மற்ற வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை பதில் மனுவாகவோ, எழுத்துப்பூர்வமான வாதமாகவோ ஜனவரி 30க்குள் தாக்கல் செய்யலாம்” என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!

இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

suo moto against ministers