ஹரியானாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய மூன்று கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஹரியானா மாநிலத்தில் இன்று (அக்டோபர் 5) ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் இன்று மாலை 6 மணியோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்… சில நிமிடங்களில் இந்த இரு மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய அதாவது எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்த இரு சட்டமன்றங்களிலும் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. பெரும்பான்மையைப் பெற ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 46 இடங்கள் தேவை.
இந்நிலையில் இன்று மாலை வெளியான அனேக எக்சிட் போல் முடிவுகளிலும் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா எக்சிட் போல்
ரிபப்ளிக் டிவி- பி மார்க்
காங்கிரஸ் 55 முதல் 62 வரை
பாஜக 18 முதல் 24 வரை
இந்தியா டுடே- சி வோட்டர்ஸ்
காங்கிரஸ் 50 முதல் 58 வரை
பாஜக 20 முதல் 28 வரை
டைஸ் நவ்
காங்கிரஸ் 50 முதல் 64 வரை
பாஜக 22 முதல் 32 வரை
நியூஸ் 24
காங்கிரஸ் 55 முதல் 62 வரை
பாஜக 18-24
ஜம்மு காஷ்மீர் எக்சிட் போல்
இந்தியா டுடே -சிவோட்டர்ஸ்
காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 40 முதல் 48 வரை
பாஜக 27 முதல் 32 வரை
மக்கள் ஜனநாயகக் கட்சி 6 முதல் 12 வரை
ஆக்சிஸ் – மை இந்தியா
காங்கிரஸ் -தே.மா.க. கூட்டணி 35 முதல் 45 வரை
பாஜக 24 முதல் 34 வரை
மக்கள் ஜனநாயகக் கட்சி 4 முதல் 6 வரை
டெய்னிக் பாஸ்கர்
காங்கிரஸ்- தேமாக கூட்டணி 35 முதல் 40 வரை
பாஜக 20 முதல் 25 வரை
மக்கள் ஜனநாயகக் கட்சி 4 முதல் 7 வரை
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரியானா சட்டமன்ற தேர்தல்… 61% வாக்குப்பதிவு!
கவுண்டம்பாளையம் ரஞ்சித், சர்ச்சை தயாரிப்பாளர் ரவீந்தர்? பிக்பாஸ் நாளை தொடக்கம்!