Haryana Cm Manohar Lal Khattar resign

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று (மார்ச் 12) தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30, ஜனநாயக் ஜனதா கட்சி 10, சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.

ஆட்சியமைக்க 46 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் ஜனநாயக் ஜனதா கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவளித்தனர்.

இதனையடுத்து பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சுவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டின் போது பாஜக, ஜனநாயக் ஜனதா கட்சி இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து பாஜகவுக்கு அளித்த ஆதரவை ஜனநாயக் ஜனதா கட்சி திரும்ப பெற்றது.

இந்தநிலையில், முதல்வர் பதவியிலிருந்து மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அம்மாநிலத்தில் உள்ள சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியை தற்போது பாஜக நாடி வருகிறது.

ஹரியானாவில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலால் பாஜக மூத்த தலைவர்கள் அர்ஜூன் முண்டா, தருண் சிங் ஆகியோர் அம்மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஹரியானா ஆளுநர் மாளிகைக்கு சென்ற மனோகர் லால் கட்டார், ஆளுநர் பந்தாரா தத்தாத்ரியாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கன்வார் பல் குஜ்ஜார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

“ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது கேபினட் அமைச்சர்கள் அனைவரும் இன்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். ஆளுநர் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவோடு, ஹரியானா மாநில முதல்வராக பாஜக தலைவர் நாயப் சாய்னி அல்லது கர்னால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டியா ஆகிய இருவரில் ஒருவரை முதல்வராக்கும் முடிவில் பாஜக தலைமை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் அமைச்சராகும் பொன்முடி… ஆளுநருக்கு கடிதம்?

Kavin விக்ரம், தனுஷுடன் ‘நேரடியாக’ மோதும் கவின்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts