அரியானா சட்டமன்ற தேர்தல்… 61% வாக்குப்பதிவு!

Published On:

| By Selvam

அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 61.19 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 5) தெரிவித்துள்ளது.

90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

அரியானாவை பொறுத்தவரை பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக களமிறங்குகின்றனர்.

அதேவேளையில் லோக் தளம், பகுஜன் சமாஜ், ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றனர்.  ஆட்சியைக் கைப்பற்றுவதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவானது மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, 61.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கவுண்டம்பாளையம் ரஞ்சித், சர்ச்சை தயாரிப்பாளர் ரவீந்தர்? பிக்பாஸ் நாளை தொடக்கம்!

 இதை செய்தால் மழையை சமாளித்துவிடலாம்… அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share