ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிஷோனி விழா காரணமாக அக்டோபர் 5-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18,24 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் ஹரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 1அன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரண்டு மாநிலங்களிலும் அக்டோபர் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பிஷோனி சமுதாய மக்கள் தங்கள் குரு ஜம்பேஷ்வரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 அன்று விழா கொண்டாடுகின்றனர்.
இதனால் ஹரியானாவின் சிர்சா, ஃபட்காபாத், ஹிசார் பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் பிஷோனி சமுதாய மக்கள் ராஜஸ்தானுக்கு செல்வார்கள்.
அதனால் அவர்களால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதன்காரணமாக வாக்குப்பதிவு நாளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று பிஷோனி மகாசபா மற்றும் ஹரியானா பாஜக மாநில தலைவர் மோகன் லால் பதோலி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
இந்தநிலையில், ஹரியானா தேர்தல் தேதி அக்டோபர் 1-க்கு பதிலாக அக்டோபர் 5-க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் அக்டோபர் 4 அன்று வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மாநிலங்களிலும் அக்டோபர் 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாசக்கடைசி சோதனைகள்… அப்டேட் குமாரு
சென்னையில் ஏஐ ஆய்வகங்கள்… கூகுளுடன் கைகோர்த்த தமிழக அரசு!