பனங்காட்டு படைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஹரிநாடார் நெல்லை நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 2) ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பனங்காட்டு படைக் கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஹரிநாடார் தலைமையில் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது, அரசு பேருந்து மீது கல்வீசி பொதுசொத்தை சேதப்படுத்தியதாக ஹரிநாடார் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஹரிநாடார் அழைத்து வரப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார், வழக்கை நெல்லை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதன் பிறகு மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹரி நாடாரை போலீசார் பெங்களூர் அழைத்து சென்றனர்.
”பேச்சே கிடையாது… வீச்சு தான்”: ஜெயிலர் டிரெய்லர் எப்படி இருக்கு?
கோடிக்கணக்கில் கடன்… கைவிட்டு போன கம்பெனி: பிரபல கலை இயக்குநர் தற்கொலை!