ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதாகவும் தங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மீது 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், பாஜகவினரால் எந்த தவறுகளையும் நிரூபிக்க முடியவில்லை என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்,
மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டை தனக்கு ஒரு நாள் கொடுத்தால் போதும், ஆளும் பாஜகவில் பாதி பேர் ஜெயிலில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (நவம்பர் 25 ) தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் ‘வரவிருக்கும் குஜராத் தேர்தலில் மோசமான தோல்விக்கு பாஜக அஞ்சுவதால், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராக அவர்கள் 167 வழக்குகளைத் தொடுத்துள்ளனர். அதில் ஒன்று கூட நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 150 க்கும் மேற்பட்ட வழக்குகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன. 800 என்ஐஏ அதிகாரிகள் ஆம் ஆத்மி தலைவர்களின் தவறுகளைக் கண்டறிய மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பொய் வழக்குகள் போட்டதால் நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்” என்று கூறினார்.
ஊழலற்ற அரசை நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியது குறித்து கெஜ்ரிவாலிடம் கேட்டபோது,
“சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை எனக்கு ஒரு நாள் கொடுங்கள், பாஜகவில் பாதி பேர் சிறையில் இருப்பார்கள்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பெண்ணிடம் பண்பற்ற முறையில் கேள்வி: மன்னிப்பு கேட்ட நீதிபதி!
நடிகையை அக்கா என்று அழைத்த திருச்சி சூர்யா