திமுகவினரை எச்சரித்த எச்.ராஜா

அரசியல்

ஆளுநர் தனது உரையில் திமுக அரசு கொடுத்த பொய்யான தகவலை தவிர்த்துள்ளார் என்பதற்கு சந்தோஷப்பட வேண்டும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி பாலக்கரை மண்டல பா.ஜ.க. சார்பில் வி.எம்.பேட்டையில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ. கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசுகையில், ”தமிழ்நாட்டில் உள்ள சில தீய சக்திகள் ஆளுநர் மற்றும் பா.ஜ.க.வை குறிவைத்து வேண்டுமென்றே பேசி வருகிறார்கள்.

சட்டசபையில் உரையாற்றும்போது ஆளுநர் தனக்கு அளிக்கப்பட்ட உரையில் எழுதப்பட்டிருந்தது பொய்யானவை என்பதால் சிலவற்றை தவிர்த்தார்.

ஆளுநருக்கு அரசு அனுப்பிய உரையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கஞ்சா புழக்கம், குண்டு வெடிப்பு, குண்டு வீச்சு என இப்படி தினமும் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

ஆளுநர் தனது உரையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லாமல், அவர்கள் கொடுத்த பொய்யான தகவலை தவிர்த்துள்ளார். அதற்கு சந்தோஷப்பட வேண்டும்.

ஆளுநரை தொடர்ந்து எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அவரை விமர்சிப்பதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொண்டால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளலாம்.” என்று எச் ராஜா கூறினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு அதிகரிப்பு!

கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “திமுகவினரை எச்சரித்த எச்.ராஜா

  1. ஆரியன் ரவி ஆளுநரா அல்லது உன் கட்சியின் மாநில தலைவரா. தமிழகத்தில் பிற்போக்கு வாதிகள் இல்லை, என்ன திட்டம் போட்டாலும் மக்கள் முறியடித்து விடுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *