சர்வதேச அரசியல் பயில்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று மாத பயணமாக லண்டன் சென்றுள்ளார். இதற்கிடையில், தமிழக பாஜகவை வழிநடத்துவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா இன்று (செப்டம்பர் 1) ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “கட்சியில் புதிய பொறுப்பு கொடுத்திருப்பதால் ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
நாளை முதல் 45 நாட்கள் பாஜகவின் கட்சி விதிகளின் படி ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில இந்திய தலைவர் முதல் அனைவரும் கட்சி உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அக்டோபர் 15 வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.
ஒரு பூத்துக்கு 400 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று டெல்லி தலைமை டார்கெட் கொடுத்துள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. ஒன்றிய, நகராட்சி என அனைத்து நிர்வாகிகளுக்கும் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,
நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்கிறார். அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு சென்னை கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்க உள்ளார்கள்.
அன்றாடம் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொடந்து குரல் கொடுப்போம். தேவை ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்றார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஆளுநரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் பேசினார். இப்போது திமுக ஆட்சி வந்ததும் ஜெயிலுக்கு போயிருக்கிறார். ஆண்டவனே இதை செய்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கார்ப்பரேட் வடிவில் செயல்படுகிறது என்ற கருத்துக்கு, “அதிமுக எப்படி செயல்படுகிறது. நண்பர் எடப்பாடி அதிமுகவுக்கு எம்.டி-யா? நான் பாஜகவில் 35 ஆண்டுகளாக கட்சி பொறுப்பில் இருக்கிறேன். பல அதிமுக அமைச்சர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் கட்சியில் இருக்கிறேன்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“டைரக்டர் ரஞ்சித் எனக்கு வாலிபரின் நிர்வாண போட்டோ அனுப்பினாரா?” – ரேவதி சொல்லும் விளக்கம்
ஃபார்முலா 4 ரேஸ்.. விறுவிறுப்பாக நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டிகள்!
எச் ராசா ஐயாவுக்கு சில சந்தேகங்க ஐயா:
புதிய பதவி ஏத்துகிட்டதும், ஆளுனரை, அரசு உயர் அதிகாரிங்கதானே சந்திப்பாங்க, அப்டினா நீங்க அரசுப் பதவியா ஏத்துகிட்டீங்க? மேலும்ஆளுனர் பதவினா கட்சிக்கு அப்பாற்பட்டவருனு சொல்றாங்களே, உண்மைங்களா?