பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் திடலில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் மோடி லீக் கபாடி போட்டி நடந்து வருகிறது.
இப்போட்டியில் நேற்று (செப்டம்பர் 18) பங்கேற்ற பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் பாஜகவினரோடு கபடி ஆடினார்.
மோடி லீக் கபாடி போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை தொடங்கி வைக்க பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா வருகை தந்தார்.

அப்போது அவர் ஆர் எஸ் எஸ் பயிற்சி பாசறையில் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது கபடி போட்டியில் சிறந்து விளங்கியதாக கூறி களத்தில் இறங்கி கபடி ஆடத் தொடங்கினார்.
ஒருபுறம் ஹெச். ராஜாவும் மறுபுறம் புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் செல்வ அழகப்பனும் களத்தில் இருந்த நிலையில் செல்வம் அழகப்பனை ஹெச். ராஜாவை பிடித்து வெற்றி அடைந்தார்.

பின்னர் அவரை பாஜகவினர் தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர். இந்த போட்டியில் கடந்த இரு தினங்களாக 150க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர்.

இந்த கபடி போட்டியில் வெற்றி அடையும் அணியினர் வருகின்ற 27ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான 15 லட்ச ரூபாய் பரிசுத் தொகைக்குள்ள கபடி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கபடி போட்டியை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செருப்பு மாலை, புகைப்பட எரிப்பு: ஆ. ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!