பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் விரைவில் பை பாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஹெச்.ராஜாவின் ஹெச்.ஆர் டீம் அவரது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ஹெச்.ராஜாவுக்கு ரத்தநாளங்களில் மூன்று அடைப்புகள் உள்ளது. பை பாஸ் சர்ஜரி மூலம் தான் இதை சரி செய்ய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சற்று அதிர்ச்சிக்குள்ளான ஹெச்.ராஜா, ’பை பாஸ் சர்ஜரி செய்வது குறித்து குடும்பத்தினரிடம் பேசிவிட்டு ஒரு நல்ல நாளாக பார்த்து சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
கூடிய விரைவில் பை பாஸ் சர்ஜரி செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மாலை ஹெச்.ராஜா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்” என்றனர்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: அன்பில் மகேஷ்
“லியோ” வெற்றி பெற திருப்பதி சென்ற லோகேஷ்!
Comments are closed.