h raja admitted apollo hospital

ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி!

அரசியல்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்.ராஜா, அக்டோபர் 5-ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து அக்டோபர் 10-ஆம் தேதி சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஹெச்.ராஜாவின் ஹெச்.ஆர் டீம் அவரது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

செல்வம்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பனீர் புலாவ்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *