நாடே எதிர்பார்க்கும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 58.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. டிசம்பர் 1ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது.
முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் கடந்த 2012, 2017ஆகிய ஆண்டுகளில் பதிவான வாக்குகளை காட்டிலும் குறைவாகும். 2012ல் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70.75 சதவிகித வாக்குகளும், 2017ல் 66.75 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன. இது 2022ல் 63 சதவிகிதமாக குறைந்தது.
இந்நிலையில் மாலை 5 மணியுடன் முடிவடைந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 58.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2017ல் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 2012ல் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு கட்ட வாக்குப்பதிவிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
மீண்டும் தலைவரானார் பரூக் அப்துல்லா
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தார்!