குஜராத் தேர்தல்: இன்று அறிவிப்பு!

Published On:

| By Monisha

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று (நவம்பர் 3) மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

பாஜக ஆளும் மாநிலமான குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி நிறைவடையவுள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இன்று மதியம் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்து குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவுள்ளார்.

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி இமாச்சல் பிரதேசம் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தலின் தேதி அறிவிப்பும் அக்டோபர் 18 ஆம் தேதியே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டு இன்று தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மோனிஷா

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் யார்?

அடுத்த 3 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share