குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!

அரசியல்

குஜராத் மற்றும் இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (டிசம்பர் 8) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 63.14 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. தொடர்ந்து 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது.

முன்னதாக, இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்த இரு மாநிலங்களிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. குஜராத்தில் புதிதாக இம்முறை ஆம் ஆத்மி தீவிரமாக களமிறங்கியது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 9 மணி வரை நிலவரப்படி குஜராத்தில் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

அதேநேரம் சி.என்.என். நியூஸ் 18 ஊடகத்தின் செய்திப்படி குஜராத்தில் பாஜக 134 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இமாச்சல் பிரதேசத்தில் பாஜக 31, காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மோனிஷா

கனமழை எதிரொலி: எங்கெங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் மஞ்சூரியன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0