குஜராத் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை!

அரசியல்

குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாகவும், 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று(நவம்பர் 3) அறிவித்தார்.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக டிசம்பர் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான மனுத்தாக்கல் நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கும்.

மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள் நவம்பர் 14. வேட்புமனு மீதான பரிசீலனை நவம்பர் 15 ஆம் தேதியும், வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக நவம்பர் 17 ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் மனுத்தாக்கல் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நவம்பர் 18 ஆம் தேதி.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற இறுதிநாள் நவம்பர் 21. குஜராத் தேர்தலில் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கலை.ரா

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

விஜய் ரசிகர்களுக்கு லேட்டாக கிடைத்த தீபாவளி பரிசு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0