குஜராத் தேர்தல்: ரவீந்திர ஜடேஜா மனைவி முன்னிலை!
குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் 11 மணி நேர நிலவரப்படி, பாஜக 152 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 7 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடத்திலும் முன்னிலையில் உள்ளனர்.
குஜராத்தில் 135 பேர் உயிரிழந்த மோர்பி பால விபத்து நடந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கண்டி அம்ருதியா 10,156 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் 8,600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
வட்கம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி பின்னடைச் சந்தித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, காம்பியா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
குஜராத்தில், பாஜக முன்னிலை வகிப்பதால், காந்திநகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மேள தாளங்களுடன் உற்சாகமாக நடனம் ஆடி வருகின்றனர்.
செல்வம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!
மாண்டஸ் புயல்: தேர்வுகள் ஒத்திவைப்பு!