குஜராத் தேர்தல்: 10 மணி நிலவரம்!
குஜராத்தில் இன்று (டிசம்பர் 8) காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் காலை 9 மணி நேர நிலவரப்படி, பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகித்தது.
இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தின் 10 மணி நேர நிலவரப்படி, பாஜக 137 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது
குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், கட்லோடியா தொகுதியில் 13,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காம்பியா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி பின்னடைவை சந்தித்துள்ளார்.
விரம்காம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹர்திக் பட்டேல் முன்னிலையில் உள்ளார்.
செல்வம்
முதல்வரின் தென்காசி பயணம் : இது ரயிலா? நகரும் வீடா?
மாண்டஸ் புயல்: கனமழை எச்சரிக்கை!