தொடர்ந்து இரண்டாவது முறையாக குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று (டிசம்பர் 12) பதவியேற்றுக் கொண்டார்.
குஜராத் மாநிலத்திற்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
டிசம்பர் 8-ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 53 சதவிகித வாக்குகளை பெற்ற பாஜக, 7-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது.
காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
காந்திநகரில் நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் பூபேந்திர படேலுடன் 16 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
செல்வம்
அமைச்சராகும் உதயநிதி: இலாகாவை இழக்கப்போகும் அமைச்சர்கள்!
கனமழை : மாணவர்களுக்கு அரைநாள் விடுப்பு!