gst fake bill registration will be suspended

போலி பில் தயாரித்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கம்!

அரசியல் தமிழகம்

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில்லை தயாரித்து வணிகம் செய்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வணிகம் செய்பவர்கள் சிலர் வணிக வரி ஏய்ப்புக்காக போலி பில் தயாரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனை தடுக்க பில்லை கணினி மயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தசூழலில் போலி பில் தயாரிப்பதை தடுக்கும் மற்றொரு நடவடிக்கையாக அமைச்சர் மூர்த்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று (பிப்ரவரி 9) சென்னை. நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புதியதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கோட்டங்களின் மூலம் வரிவருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அனைத்து இணை ஆணையர்களும் வரிவருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்றவும், அனைத்து நிறுவனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியே போனாலும் பரவாயில்லை… அட்டாக் பாஜக… தயாரான ஸ்டாலின்

என் தகுதியைப் பற்றிப் பேச எடப்பாடிக்கு யோக்கியதை இல்லை: ஆ.ராசா காட்டம்!

”தெறி அப்டேட்” சிவகார்த்திகேயனின் 25-வது பட இயக்குநர் இவர்தான்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0