”என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்ததைக் கேட்டு நான் பெருமையடைகிறேன்” என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 13) மதுரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள்.
அதைக் கேட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். ஆம், நான் கர்ப்பிணிகளின் உடல்நலனில் அக்கறை கொண்ட அமைச்சர்.
இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். எந்த ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நான் செல்லவில்லை என விமர்சித்தார்களோ,
அதே ஜிஎஸ்டி கவுன்சிலை அடுத்தமுறை மதுரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். சமூகத்தில் ஏற்றத்தாழ்வை போக்க கல்வி மிக முக்கியமானது.
அரசு திட்டங்கள் சரியான நேரங்களில் சரியான நபர்களுக்கு சென்று சேர தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இனி வருங்காலங்களிலும் மேலும் படிப்படியாக வருவாய் பற்றாக்குறையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
ஜெ.பிரகாஷ்
தேவர் குருபூஜைக்கு மோடி வரும் திட்டம் இல்லை: அண்ணாமலை
இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்