தமிழில் பாஸ் என்றால் மட்டுமே அரசு வேலை!

Published On:

| By Kalai

Govt job only if pass in tamil

தமிழில் தேர்ச்சி பெறாமல் இனி அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற சட்டத்திருத்த மசோதாவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று(ஜனவரி 13) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் தமிழ் இளைஞரை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் நேரடி போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது.

கலை.ரா

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment