மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதை ஒட்டி பிரதமர் மோடி ஜனவரி, பிப்ரவரி மாதங்களைத் தொடர்ந்து மார்ச் மாதத்திலும் தமிழ்நாட்டுக்கான பயணத் திட்டங்களை அதிகப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களுக்கு வந்த பிரதமர் மோடி மீண்டும் மார்ச் 4 ஆம் தேதி சென்னை வருகிறார்.
பிப்ரவரி 27ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடியோடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. அன்றைய அரசு விழாவில் திமுக அரசை பிரதமர் மோடி கடுமையாகத் தாக்கியது குறிப்பிடத் தக்கது.
அதேபோல வருகிற மார்ச் 4ஆம் தேதி சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் அரசு நிகழ்விலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார். இதை முதல்வரின் பயணத் திட்டமே சொல்கிறது.
.
நாளை மார்ச் 3 ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை செல்கிறார். சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் முதல்வர் ஸ்டாலின், மறுநாள் மார்ச் 4ஆம் தேதி காலை புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
எனவே பிரதமர் மோடியோடு அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.
–வேந்தன்
பாஜக முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை!
வைரலாகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘நிச்சயதார்த்த’ புகைப்படங்கள்!