ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான்: முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் காதுகள் இல்லை என முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் கேள்வி பதில் தொடரில் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டப்படுவதைத் தாமதப்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார் என்றும் கூறியது.
தமிழகத்திலும் சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் சுமார் 20 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. அதோடு, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பினார்.
இந்தச்சூழலில் இன்று (மார்ச் 9) உங்களில் ஒருவன் கேள்வி பதில் தொடரின் வீடியோவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. இதனை ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா? என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த அவர், இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்க்கும் போது, ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்று தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.
பிரியா
ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!