ஆளுநர் தலையிட வேண்டும்: அதிமுக கோரிக்கை!

அரசியல்

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று (ஜூன் 15) மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், “மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்திக்கிறார். அவர் திமுகவைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக மீடியாக்களில் திமுக செய்தி தொடர்பாளராக பேசி வந்தவர்.

அப்படிப்பட்டவரை உறுப்பினராக நியமித்ததே தவறானது. மனித உரிமை ஆணையம் என்பது மிகப் பெரிய அமைப்பு. இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகளையும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமிப்பார்கள். ஆனால் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், ஒரு திமுக செய்தித் தொடர்பாளராக இருக்கக் கூடிய இவர் செந்தில் பாலாஜியை மனித உரிமை ஆணையராக பார்க்க போலாமா?. ஒரு முதல்வர் குற்றவாளியை பார்க்க போலாமா?

இதில் சட்டத்தின் ஆட்சி எங்கிருக்கிறது. தமிழக காவல் துறை துறையூரில் ஒருவரை அடித்தே கொன்றது. இதற்கு மாநில மனித உரிமை ஆணையம் வரவே இல்லை. நான் தேசிய ஆணையத்தில் புகார் கொடுத்த பின் 10 லட்சம் ரூபாய் தமிழ்நாடு காவல்துறை இழப்பீடாக கொடுத்தது. அந்த வகையில் மாநில மனித உரிமை ஆணையம் செயல்படாத அமைப்பாக இருக்கிறது.

கண்ணதாசன் எனது நண்பர் தான். இதில் வேறு கருத்து இல்லை. ஆனால் நீங்களே உங்கள் வழக்கிற்கு நீதிபதியாக இருக்க முடியுமா? கண்ணதாசனை உறுப்பினராக நியமித்ததே தவறு. அவர் கொடுக்கும் அறிக்கை பொய்யாகத்தான் இருக்க முடியும். எனவே ஆளுநர் இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசும் தலையிட வேண்டும். கண்ணதாசன் கொடுக்கிற அறிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று கூறினார்.

பிரியா

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுப்பு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *