ஆட்சியமைக்க சித்தராமையாவுக்கு ஆளுநர் அழைப்பு!

அரசியல் இந்தியா

கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்க ஆளுநர் தவார்சந்த் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் மே 13-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

முதல்வர் பதவிக்கு சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

நான்கு நாட்களுக்கு பிறகு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் என காங்கிரஸ் கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் பெங்களூரில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடிதத்துடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் தவார்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மே 20-ஆம் தேதி 12.30 மணியளவில் பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

செல்வம்

ரஜினியுடன் இணைந்த கபில்தேவ்

“நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும்”: ஈஸ்வரன் வலியுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0