திராவிடம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கியது, ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம்- இணைக்கும் பாரதம் தொடர் என்ற பெயரில் இரண்டு நாள் கருத்தரங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(அக்டோபர் 10) துவக்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைகழகம், திருவள்ளுவர் பல்கலைகழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களில் இருந்து 156 மாணவ. மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர்.
ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது இல்லை.
ஆங்கிலேயர்கள் 1905ஆம் ஆண்டு வங்கத்தை மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரித்த நேரத்தில் தமிழகத்தில் வ.உ.சி, பாரதியார் போராடினார்கள்.
பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை எதிர்த்து காமராஜர் போராடினார். எங்கோ நடக்கிறது என அவர்கள் அமைதியாக இருக்கவில்லை.
இந்தியாவை தெரிந்துகொள்ள புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையில் கொண்டது. ஆனால் பாரதம் என்பது யாரோ ஒருவரின் கீழ் இருப்பதில்லை. பாரதம் எப்போதும் தர்மத்தை கடைப்பிடிப்பதாக இருந்தது.
அரசர்கள் தர்மத்தை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இமாலயம் முதல் கடைசி கடற்பகுதி வரை பாரதம் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது” என்று பேசினார் ஆளுநர்.
மேலும் அவர், “1956ம் ஆண்டு வரை மதராஸ் மாகாணமாக இருந்தது. அதன் பின் மொழி அடிப்படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலுங்கானா,
என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான் நீ என தற்போது பேசி வருகிறார்கள்.
தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான்.
ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை குறுக்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்காக மொழி அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், சாதியினுள் உள்ள உட்கட்டமைப்புகளை எல்லாம் வைத்து அரசியல் செய்வார்கள்.
இதனைத்தான் நமக்கு கூறி வருகின்றனர். ஆனால் இந்தியா என்பது அடிப்படையில் அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமை தான்” என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
கலை.ரா
முறைகேடாக பட்டம்: சென்னை பல்கலை ஊழியர்கள் சஸ்பெண்ட்!
நானும் தோனியோட ஊருதான்: சிக்ஸர் மழை பொழிந்த இளம் வீரர்!
இவனுங்க ஏதோ சதி பன்ரானுங்க. தமிழ்நாட்டை அழிக்கலாம்னு முயற்சி செய்கிறார்கள்.