முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ”70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை!
ஈரோடு கிழக்கு: மின்னம்பலம் வாக்கு கணிப்பு!