இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜனவரி 9 ) காலை 10 மணிக்கு தொடங்கியது.
சட்டபேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் தன்னுடையை உரையை தொடங்கினார்.
கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
மேலும் அவர் தன்னுடைய உரையை தொடர்ந்து பேசிவருகிறார்.
அவர் தன்னுடைய உரையை வாசிக்கும் போது தமிழ்நாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்