தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று (ஜனவரி 13 ) காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசுத் தலைவரை சந்திப்பாரா என்பது குறித்து ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் அதிகாரபூா்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் குடியரசுத் தலைவரை ஆளுநா் சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநா் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடா்பாக,
தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, நாடாளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆா்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆா்.இளங்கோ,
ஆகியோா் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்முவை நேற்று (ஜனவரி 12) சந்தித்த நிலையில், ஆளுநா் ரவி இன்று டெல்லி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பொம்மைகள் பறிமுதல்: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் !