நாய்க்கறி உண்பவர்களா?: ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

அரசியல்

ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ஆளுநர் குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “நமது வரிப்பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு நமது தலையிலேயே கை வைக்கிறார் ஆளுநர்.

இந்த ஆட்சிக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்றே செயல்படுகிறார். நமது மசோதாக்களுக்கு எல்லாம் கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறார்.

நாகாலாந்தில் இவரை ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள். ஏன் விரட்டி அடித்தார்கள்? தப்பாக நினைத்துவிடக் கூடாது. நாகாலாந்தில் நாய்க்கறி சாப்பிடுவார்கள். அவர்களுக்கே இவ்வளவு சொரணை வந்து இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடுகிற தமிழர்களுக்கு எந்தளவுக்குச் சொரணை இருக்கும்” என்று கூறியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி பேசிய இந்த பாகத்தை மட்டும் தமிழ்நாடு ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தைக் காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரஜினி vs கமல் 80’s பில்டப் டீசர் எப்படி?

இந்தி பெல்ட்டில் திடீர் அட்டாக்: கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மோடி துடிப்பது ஏன்?

+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0